`நண்பர்கள் மஞ்சள் மாத்திரை கொடுத்தார்கள்’ இசை நிகழ்ச்சியில் போதை; மாணவர்கள் உயிரிழப்பு

Spread the love

மும்பை கோரேகாவ் நெஸ்கோ கண்காட்சி மையத்தில் “‘999999999 Music Concert” என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதில் தென் மும்பை கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் திரளாக வந்திருந்தனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் சேர்ந்து ஆடினர். அப்போது அவர்கள் உற்சாகமாக ஆட மாணவர்களுக்கு ஏதோ ஒரு மாத்திரையை கொடுத்தகாகத் தெரிகிறது. அந்த மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் அதிகாலை வரை நடனமாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களால் வாக்குமூலம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள்.

அவர்கள் தென்மும்பை கல்லூரியில் எம்.பி.ஏ.படித்து வந்தனர்.

இதில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு மாணவி நடந்த சம்பவம் குறித்து கூறுகையில்,” என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியின் போது நாங்கள் சேர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தோம். அப்போது சக மாணவர்கள் மஞ்சள் கலர் மாத்திரை ஒன்றைக் கொடுத்துச் சாப்பிட சொன்னார்கள். என்னுடன் இருந்த மற்ற மாணவர்களும் சாப்பிட்டனர். கடைசியாக நான் அவளை ( இறந்த மாணவி) பார்த்தபோது நடனமாடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை”என்று தெரிவித்தார்.

போலீஸார் இது குறித்து நடத்திய விசாரணையில் MDMA எனப்படும் ஒரு வித போதைப்பொருள் கலந்த மாத்திரை விநியோகம் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தென்மும்பை கல்லூரி மாணவர்கள் 25 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்களிடம் விசாரணை நடத்தி போதைப்பொருள் மாத்திரையை சப்ளை செய்த இரண்டு மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *