'நண்பா… நண்பீஸ் உங்களுக்கு அரசியல் வேண்டாம்!' – மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

Spread the love

தவெக கட்சி சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நீலாங்கரையில் தனியார் மண்டபத்தில் நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் தலைமையேற்று விருதுகளை வழங்கும் முன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் விஜய் பேசியிருந்தார்.

விஜய்
விஜய்

முதல்வர் விஜய் பேசியதாவது, “என்னுடைய நண்பா நண்பீஸூக்கு கோடிக் கோடி நன்றியைச் சொல்லியாக வேண்டும். என் மீது நீங்கள் வைத்திருப்பது அளவுகடந்த அன்பு. என்னுடைய வாழ்க்கையின் ஊக்கமே நீங்கள்தான். இப்படியொரு அன்பைப் பெறும் வரத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

நான் இங்கே முதல்வராக வரவில்லை. உங்களின் அண்ணனாக வந்திருக்கிறேன். 2029 தேர்தலுக்கு இப்போதே தயார் செய்கிறாரோ என நினைப்பார்கள். ஆனால், நான் இங்கே அரசியல் பேச வரவில்லை.

இப்போதைக்கு உங்களுக்கு கட்சி அரசியல் தேவையில்லை. இப்போது நன்றாகப் படியுங்கள். பெரிய உயரங்களுக்குச் சென்று சாதியுங்கள். பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஊரைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் யோசியுங்கள். நான் உங்களை நம்பிதான் இருக்கிறேன். தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறேன்.

விஜய்
விஜய்

எல்லாரும் உங்களுக்கென ஒரு தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தனித்தன்மையோடு இருந்தால் நிறைய பேருக்கு உங்களைப் பிடிக்காது. நிறைய தடைகள் வரும். எப்போதெல்லாம் உங்களை தடுக்க நினைக்கிறார்களோ, அப்போது உங்களின் வெற்றி அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தடைகளையெல்லாம் தாண்டி நீங்கள் வென்று விட்டால் ‘Stomach Burning’ தான்…” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *