உதாரணத்திற்கு, தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் 7 பேர் நாளை மறுநாள், ‘ஆப்சென்ட்’ ஆகினால், மீதம் இருக்கும் 226 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த வாக்கெடுப்பில் முதலில் சபாநாயகர் கலந்துகொள்ள மாட்டார். ஒருவேளை, பெரும்பான்மை நிரூபிப்பதில் ‘டை (Tie)’ ஏற்பட்டால், சபாநாயகரின் வாக்கு கணக்கில் கொள்ளப்படும்.
பெரும்பான்மை கிடைக்காவிட்டால்…
ஒருவேளை, இந்த வாக்கெடுப்பில் விஜய்க்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அவர் அவருடைய முதலமைச்சர் பதவியை உடனே இழக்க வேண்டியதாக இருக்கும்.
‘இழக்க’ வேண்டியதாக இருக்கும் என்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்பதெல்லாம் இல்லை.
ஆளுநர் அடுத்ததாக அதிக தொகுதிகளை வைத்திருக்கும் அரசியல் கட்சியைப் பெரும்பான்மை நிரூபிக்க அழைப்பார்.
எந்தக் கட்சியாலும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாவிட்டால், ஆளுநர் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரைத்துவிடுவார்.