நவம்பர் 15.. ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியல்.. 10 அணிகளுக்கும் கெடு விதித்த ஐபிஎல் நிர்வாகம்? | IPL 2027: All 10 Franchises Set November 15 Deadline to Submit Retained Players List for IPL Mini Auction

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: 2027ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலை 10 அணிகளும் நவம்பர் 15ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் டிசம்பர் 2ஆம் வாரம் முடிவில் ஐபிஎல் ஏலம் நடக்கலாம் என்று தெரிகிறது.

2027ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் முதல் வாரம் தொடங்கி மே 3வது வாரத்துடன் நிறைவு அடையும் என்று தகவல் வெளியானது. மே கடைசி வாரம் வரை ஐபிஎல் தொடரை இழுத்து கொண்டு செல்ல பிசிசிஐ நிர்வாகம் விரும்பவில்லை. இதனால் பல்வேறு சர்வதேச தொடர்களுக்கு போதிய பயிற்சி செய்ய முடியாமல் வீரர்கள் தடுமாறுவது தொடர் கதையாகி வருகிறது.

IPL 2027

அதனை களையும் வகையில் மே 3வது வாரத்திற்குள் ஐபிஎல் தொடரை நிறைவு செய்ய இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடந்த வந்த ஐபிஎல் ஏலம், இம்முறை இந்தியாவிலேயே நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணிகளும் ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் அந்த பட்டியலை வெளியிடவும் வேண்டும். இதன் மூலமாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களை பட்டியலிட முடியும். தற்போது இதுதொடர்பாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதாவது 2027ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலை 10 அணிகளும் நவம்பர் 15ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு அணி எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம்.. அதேபோல் தக்க வைத்து கொள்ளவும் முடியும்.

இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை, சிஎஸ்கே, லக்னோ, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றன. கடந்த சீசனில் அந்த அணியின் வீரர்கள் ஆட்டத்திலும், கலவையிலும் சில பிரச்சனைகள் இருந்தன. குறிப்பாக சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணியில் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால் இம்முறை யார் யார் ரிலீஸ் செய்யப்படுவார்கள் என்ற விவாதம் அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *