நவம்பர் 24-ம் தேதி வானில் தோன்றும் பிரமாண்ட சூப்பர்மூன் – வானை அலங்கரிக்க வரும் அரிய நிகழ்வு!| Supermoon on November 24: Don’t Miss This Rare Moon Sight

Spread the love

“வெண்ணிலவே… வெள்ளி வெள்ளி நிலவே…” என்று பாடல்கள் கொண்டாடும் நிலவை ரசிக்காதவர்கள் யார்? தேய்ந்தும் வளர்ந்தும், சில நேரங்களில் வெண்மையாகவும், சில நேரங்களில் பொன்னிறமாகவும் வானில் வலம் வரும் நிலவு, தினமும் நம் கண்களுக்கு விருந்தளித்துக்கொண்டே இருக்கிறது.

இரவு நேர வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது, அந்த நிலவின் அழகு நம்மை சில நிமிடங்கள் அப்படியே ரசிக்க வைக்கும். ஆனால், நவம்பர் 24-ம் தேதி அந்த நிலவு வழக்கத்தைவிட இன்னும் கொஞ்சம் பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கப் போகிறது. காரணம்… அன்று தோன்றப்போகும் “சூப்பர்மூன்’!

நிலவு தனது 27 நாள் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும் நிலையில் முழு நிலவாகத் தோன்றும்போது, அது ‘சூப்பர்மூன்’ என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நிலவு வழக்கத்தைவிட பிரமாண்டமாகத் தெரியும்.

பொதுவாகத் தோன்றும் முழு நிலவைவிட இந்த சூப்பர்மூன் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசத்துடனும் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நவம்பர் 24-ம் தேதி இரவு 8:23 மணிக்கு இந்த முழு நிலவு உச்சநிலையை அடையும்.

இந்த நவம்பர் முழு நிலவுக்கு ‘பீவர் மூன்’ (Beaver Moon) என்ற பெயரும் உண்டு. குளிர்காலத்துக்கு முன்பு நீர்நாய்கள் (Beavers) சுறுசுறுப்பாக செயல்படும் காலத்தில் இந்த முழு நிலவு தோன்றுவதால், இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

அதனால், நவம்பர் 24-ம் தேதி இரவு வானத்தை ஒருமுறை அண்ணாந்து பாருங்கள்… வழக்கமான நிலவு அல்ல, பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட நிலவு உங்களுக்காகக் காத்திருக்கிறது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *