அன்சுல் கம்போஜ் செய்த சம்பவம்.. இனி அவருக்கு வரப்போகும் பெரிய பிரச்சனை.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்! | Dinesh Karthik Says Anshul Kamboj Nightwatchman Knock Against NZ Will Raise Expectations From His Batting

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய அன்சுல் கம்போஜ் பேட்டிங்கை பார்த்தவர்கள் இனி அவரிடம் இருந்து பேட்டிங்கில் அதிகம் எதிர்பார்ப்பார்கள் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி மிரட்டலாக பேட்டிங் ஆடியது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 720 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 128 ரன்களையும், துருவ் ஜுரெல் 78 ரன்களையும் விளாசினர்.

Dinesh Karthik

அதேபோல் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய அன்சுல் கம்போஜ் 42 பந்துகளில் ஒரு சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 38 ரன்கள் எடுத்து மிரள வைத்தார். அன்சுல் கம்போஜின் பேட்டிங் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு தேவையான மொமண்ட்டத்தை அன்சுல் கம்போஜ் உருவாக்கி கொடுத்தார்.

இதுதொடர்பாக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், யாராவது அதிகாலை 3.30 மணிக்கு டிவியை ஆன் செய்து அன்சுல் கம்போஜின் பேட்டிங்கையும், அவரின் ஷாட்களையும் பார்த்திருந்தால், இந்த பிட்ச் குறித்து அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்திய அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களும் மிகச்சிறப்பாக விளையாடினார்கள்.

கடந்த முறை நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 இன்னிங்ஸிலும் சேர்த்தே 720 ரன்களை தான் குவித்தது. ஆனால் இம்முறை ஒரே இன்னிங்ஸில் 720 ரன்களை குவித்துள்ளது. அன்சுல் கம்போஜ் ஆடிய ஷாட்களை பார்த்தவர்கள் நிச்சயமாக அவரிடம் இருந்து பேட்டிங்கில் எப்போதும் ஒரு கணிசமான பங்களிப்பை எதிர்பார்க்க போகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் தொடரில் அவரின் இடம் நிரந்தரமாவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் அன்சுல் கம்போஜ் எப்போதும் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யக் கூடியவர் தான். கிட்டத்தட்ட ஷர்துல் தாகூரின் ஒரு இளம் வெர்ஷனாக அன்சுல் கம்போஜ் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *