நவராத்திரி முதல் நாள்: தமிழ் பக்திப் பாடலுடன் மோடி வாழ்த்து|Modi’s Tamil Devotional Song Post Grabs Attention on Navratri Day 1

Spread the love

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.

இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’ என்னும் தமிழ் பக்திப் பாடலை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நவராத்திரியின் சுபவேளையில், அமைதியின் அதிபதியான ஸ்ரீ சைலபுத்திரி தேவியின் பாதங்களில் கோடானுகோடி வணக்கங்கள்.

அன்னையின் திவ்ய அருள் அனைவரின் இதயத்திலும் பொறுமையையும் தன்னம்பிக்கையையும் சுடரச் செய்யட்டும்.

தேவியின் ஆசிகள் நாட்டின் மக்கள் மீது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று நவராத்திரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி.

இன்று போரூர் மெட்ரோ ரயில் நிலையத் திறப்பிற்காகச் சென்னை வந்திருக்கிறார் மோடி.

இந்த நேரத்தில் தமிழ் பக்திப் பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் மோடி பகிர்ந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *