நாகை: சுற்றுலா வந்த இடத்தில் 2 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; 2 கேரள இளைஞர்கள் போக்சோவில் கைது | Nagai: young girls sexually harassed youths from Kerala arrested under POCSO Act

Spread the love

இளைஞர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்து சிறுமிகள் இருவரையும் தங்க வைத்துள்ளனர். பின்னர் இருவரும் இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இரவு முழுவதும் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்தச் சிறுமிகள் சத்தம் போட்டு கதறியுள்ளனர். இந்நிலையில் சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பக்கத்து அறைகளில் இருந்தவர்கள் வேளாங்கண்ணி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இதையடுத்து விடுதிக்கு வந்த போலீஸார் சிறுமிகள் இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அஜய், விஷால் இருவரும் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய், விஷால் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிகள் இருவரையும் நாகையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *