நாகை: ”மெத் கடத்தல் விவகாரம்”- தவெக நிர்வாகி பூபாலனுக்கு சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா..? | Nagai methamphetamine trafficking case: Was the meth stashed in a pond belonging to TVK functionary Boopalan?

Spread the love

சிந்தாமணியில் உள்ள பூபாலனின் பங்களா வீடு பல கோடி மதிப்புடையது. வெளி நபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் பல அடி உயரம் கொண்ட பெரிய மதில் சுவர் வீட்டைச் சுற்றி இருக்கும். உள்ளே என்ன நடக்குதுன்னே வெளியே தெரியாது. வீட்டுக்குப் பின் பகுதியில் மீன் குளம் ஒன்றை அமைத்து மீண் வளர்ப்பில் ஈடுப்பட்டு வந்தார். பெயருக்குதான் அது மீன் குளம் என்கிறார்கள். அதற்குள் கடத்தல் பொருள்களைப் போட்டு பதுக்கி வைப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரிடம் பூபாலன் குளத்திற்கு அடியில் குழித்தோண்டி பல கோடி மதிப்புடைய மெத்தை புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து இன்று மாலை நாகை வந்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சிலரிடம் விசாரணை நடத்தினர்.

அத்துடன் குளத்தில் இருந்த தண்ணீரைச் சிலரை வைத்து வெளியேற்றினர். குளத்துக்கு அடியில் மெத் புதைக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பும், தன்னைக் கைது செய்வதற்கு முன்பு பூபாலன்தான் முக்கிய நபர்களுக்கு மட்டும் பேசுவதற்குப் பயன்படுத்தி வந்த செல்போனை குளத்துக்குள் போட்டு விட்டார்.

அந்தச் செல்போன் கிடைத்தால் யாருக்கெல்லாம் இந்தக் கடத்தலில் தொடர்பிருக்கிறது என்பதை கண்டறியலாம் என்பதால் செல்போனை எடுப்பதற்காக இதனைச் செய்கிறார்கள் என மற்றொரு தரப்பிலும் பேசப்படுகிறது.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரின் சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்கிறார்கள். இந்தச் சம்பவம் நாகை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *