“என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படத்தின்” – நடிகர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி! – வைரலாகும் வீடியோ! | “The Movie That Changed My Life” – ctor Abishan Jeevind Gets Emotional! | Video Goes Viral!

Spread the love

நடிகர் அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுகமான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி”. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கடந்த ஆண்டும் மே 1-ம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர். இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை நகைச்சுவை பாணியில் உணர்வுப்பூர்வமாகக் கூறியிருந்தனர்.

ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் ரூ. 20 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து அசத்தியது. தற்போது இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும்.

இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. அதைக் கொண்டாடும் விதமாக `டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மேக்கிங் வீடியோவைப் பகிர்ந்திருக்கும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், “என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படத்தின் ஓராண்டு நிறைவடைகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *