“நாங்கள் இருப்பதே வாடகை வீடு; என் குடும்பத்தில் யாரிடமும் ரூ.2 கோடி இல்லை.!”- அமைச்சர் ரமேஷ்| tvk minister ramesh about shoe and palani land controversies

Spread the love

கடந்த ஜூலை 25ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது கிழக்கு கோபுரத்தில் ஷூ அணிந்தபடி அவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

ஷூ அணிந்து சென்ற புகைப்படம்

ஷூ அணிந்து சென்ற புகைப்படம்

அதற்கு பதிலளித்த அமைச்சர், “ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி முழுவதும் கற்களும், ஆணிகளும், இரும்புகளும் சிதறி கிடக்கின்றன. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களே தங்கள் பாதுகாப்புக்காகக் காலணி அணிந்துதான் வேலை செய்கிறார்கள்.

நான் சென்றபோது அங்கிருந்த நன்கொடையாளர் நீங்கள் ஷூவைக் கழற்ற வேண்டாம், அப்படியே வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். ஷூ அணிந்து சென்றதை விமர்சிப்பவர்களுக்கு பகுத்தறிவு என்று ஒன்று இருக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *