"நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல" – ரசிகருடனான செல்பி விவகாரம் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்

Spread the love

வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.

'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'
‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை டேவிட் தவான் இயக்கி இருக்கிறார்.

படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் பூஜாவுடன் செல்பி எடுக்க முயன்றபோது, அவரைப் பொருட்படுத்தாமல் பூஜா கடந்து சென்றிருக்கிறார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் அவரது செயலைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.

இந்நிலையில் ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பூஜா ஹெக்டேவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

அதற்கு பதிலளித்த அவர், “திரைத்துறையினருக்கு உயிர் கொடுப்பதே ரசிகர்கள்தான். சில நேரங்களில் அவசரமான சூழ்நிலைகள் அல்லது அதிக கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களைக் கவனிக்க முடியாமல் போகலாம்.

ஆனால் அதற்கு நாங்கள் தலைக்கனம் கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல

ரசிகர்கள்தான் எங்களின் பலம். எப்போதும் எங்களுக்கு தெய்வங்களைப் போன்றவர்கள். எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தவறதாகப் புரிந்துகொள்ள வேண்டாம்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *