மத சாயம் பூசி பழிவாங்க முயற்சி: நடிகர் டினி டாம் மீது அன்சிபா அதிரடிப் புகார்! | Actress Ansiba allegation, describing Tiny Tom as a social disaster.

Spread the love

மலையாளத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகர் டினி டாம் இடையேயான மோதல் சர்ச்சையாகியிருக்கிறது.

நடிகர் டினி டாம், நடிகை அன்சிபா ஹாசன் மீது தனிப்பட்ட விரோதம் மற்றும் மத ரீதியான காரணங்களால், அவர் தயாரிப்பு நிர்வாகி ராஜீவ் குடப்பனக்குன்னுவின் மகனைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றார் என்ற வதந்தியைப் பரப்பினார்.

மேலும், அன்சிபாவை “ஜிஹாதி’ என்றும் அவதூறு செய்தார். ஆனால், ராஜீவ் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் இந்தச் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து, உண்மை நிலையை விளக்கினர்.

நடிகை அன்சிபா

நடிகை அன்சிபா

அதைத் தொடர்ந்து ‘அம்மா’ (AMMA) சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்த அன்சிபா, இதுகுறித்து சங்கத்தில் புகாரளித்தார். எனினும், குற்றம் சாட்டப்பட்ட டினி டாமுக்கு ஆதரவாக சங்க நிர்வாகிகள் செயல்பட்டதால், தனக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்து அன்சிபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில்தான் அம்மா சங்கத்தின் துணைத் தலைவர் லட்சுமிப்ரியா அளித்த புகாரின் பேரில், திருப்பூணித்துறா காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அன்சிபா, அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் ரேஷ்மா தன்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அன்சிபா கேரள முதலமைச்சரிடம் புகாரளிக்க, அது டிஜிபி-யின் (DGP) விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *