“நாங்க தான் கொன்றோம்”.. பஞ்சாப் போலீஸ் ஏட்டு கொலைக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு | Pakistan ISI backed tehreek e taliban hindustan claims responsibility for Punjab police head constable murder

Spread the love

India

oi-Nantha Kumar R

சண்டிகர்: பஞ்சாப்பில் போலீஸ் ஏட்டு வினோத் குமார் நெடுஞ்சாலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் தான் போலீஸ் ஏட்டுவை சுட்டுக்கொன்றது நாங்கள் தான் என்று பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக் இ தாலிபான் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பஞ்சாப்பில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் வினோத் குமார். வயது 42. இவர் பஞ்சாப்பில் குர்டாஸ்பூர் மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்.

police terrorist punjab

இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில்அமிர்தசார் – பதான்கோட் நெடுஞ்சாலையில் குர்டாஸ்பூர் பகுதியில் திடீரென்று இறந்து கிடந்தார். அவரை யாரோ துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருந்தனர்.

வினோத்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். வினோத் குமார் சமீபத்தில் சங்க்ரூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இது அவரது சொந்த ஊரில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பணியை முடித்துவிட்டு வினோத் குமார் போலீஸ் சீருடையில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த கொலை நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவருக்கு ‘லிப்ட்’ கொடுத்து கொலை செய்துள்ளதாக சந்தேகம் உள்ளது. அதோடு இதன் பின்னணியில் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இருக்கலாம் என அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி சிறப்பு டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பிகே சின்ஹா கூறுகையில், ”முதறகட்ட விசாரணையில் இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள கொலை என்பது தெரியவந்துள்ளது” என்றார்.

இந்நிலையில் தான் வினோத் குமார் கொலைக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானை மையப்படுத்தி ‘தெஹ்ரீக் இ தாலிபான் ஹிந்துஸ்தான்” என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவில் செயல்பட்டு வரும் நிலையில் வினோத் குமார் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் கூட தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டி உள்ளது. இருப்பினும் இதுபற்றி இன்னும் பஞ்சாப் போலீஸ் உறுதி செய்யவில்லை. தொட்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப்பில் இப்படி திடீரென்று போலீசார் கொல்லப்படுவது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டில் இதுவரை 5 போலீசார் கொல்லப்பட்டுள்ள நிலையில் வினோத் குமார் 6வது நபர். இதனால் போலீசார் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *