நாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; MP-களுக்கான ரூல்ஸ்!

Spread the love

வருகிற ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை, நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

இந்தக் கூட்டத்தொடர்களை அவை தலைவர்கள் வழிநடத்துவார்கள்… நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்… – இதை டிவியிலோ, சோசியல் மீடியாவிலோ பார்த்திருப்போம்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் ஃபாலோ செய்ய வேண்டிய சில ரூல்ஸ் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா?

வருகிற கூட்டத்தொடருக்கு மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் இதோ…

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

> நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஆயுதங்கள் அல்லது வெடிபொருள்கள் கொண்டு வருவதற்குத் தடை.

> அவை தலைவரின் முன் அனுமதி இல்லாமல் எந்தவொரு புத்தகங்கள், கேள்வித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைக் குறிப்புகள் அல்லது அச்சிடப்பட்ட எந்தவொரு பொருளையும் வளாகத்திற்குள் விநியோகிக்கக்கூடாது.

> நாடாளுமன்ற வளாகத்திற்குள் வாகனங்களின் வேகம் மணிக்கு 10 கி.மீ ஆக இருக்க வேண்டும்.

> அவைக்கு இடையூறு இல்லாத வகையிலும்… அவைக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் மக்களவைக்குள் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட வேண்டும்… அலாரங்கள் ஆஃப் செய்யப்பட வேண்டும்.

> நாடாளுமன்ற உறுப்பினரின் ஒரே ஒரேயொரு உதவியாளருக்கு மட்டும் கூட்டத்தொடருக்கான பாஸ் வழங்கப்படும்.

> நாடாளுமன்றக் கட்டடத்தின் நுழைவாயில்கள் முன்பு எந்தவிதப் போராட்டங்களோ அல்லது தர்ணாக்களோ நடத்தக்கூடாது.

> ஸ்மார்ட் கண்ணாடிகள், பேனா கேமராக்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற நவீன சாதனங்களுக்குத் தடை. காரணம், இவை உறுப்பினர்களின் தனியுரிமை மற்றும் நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *