“நான் ஆவலோடு காத்திருக்கிறேன்”- புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி| New Captain Smriti Mandhana Gets Emotional After Being Appointed Captain

Spread the love

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் நேற்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதிய கேப்டன் பதவி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்மிருதி மந்தனா, “இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது எனக்கு எப்போதும் மிக முக்கியமான ஒன்று. இப்போது இந்த அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நான் மிகவும் மதிப்பாய் கருதுகிறேன்.

பிசிசிஐ, தேர்வு குழுவினர், எனது சக வீரர்கள் மற்றும் எனது இந்த பயணம் முழுவதும் எனக்கு ஆதரவளித்து, என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *