இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களில் இந்திய அணியை வழிநடத்த இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தனது புதிய பொறுப்பு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “நான் என்னுடைய தனித்துவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
நான் இதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, அதே நபராகத்தான் இப்போதும் இருக்க வேண்டும். வேறொருவரைப் போல மாறவோ அல்லது யாருடைய நிழலிலும் இருக்கவோ நான் விரும்பவில்லை.