தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் சீரிஸ் ’அக்கா’.
பெண்கள் ஆளும் கற்பனை கேங்ஸ்டர் உலகை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வெப் சீரிஸ் இன்று (அக்.30) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் புரொமோஷனுக்காக ஆங்கில ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராதிகா ஆப்தேவிடம், 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” எனது பார்வையில், வடஇந்திய நடிகைகள் வெள்ளையாக இருப்பதால்தான் தென்னிந்திய திரைப்படங்களில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
நான் அதிகம் வெள்ளையாக இல்லை. தென்னிந்திய படங்களில் நடிக்க தென்னிந்திய நடிகைகளையே தேர்வு செய்யலாமே? எதற்காக வடஇந்திய நடிகைகளைத் தேடிச் செல்கிறார்கள்?.