`பனிப்பாறை ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு’ – மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு எச்சரிக்கை! | ‘Glacial lake bursts, causing sudden flash floods’ – Warning issued for the states of West Bengal and Assam!

Spread the love

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, புனகா பகுதியில் உள்ள டொச்சுகா-ஜோம்லிங்தாங்-ரிட்சா சிவோக் கிராமங்களில் பாசனப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி நீரேற்றுப் பாசனத் திட்டம் சேதமடைந்துள்ளது. தற்போது இத்திட்டம் செயல்படுவதை நிறுத்தியுள்ளதாகவும், சேதத்தின் முழுமையான அளவு இனிமேல்தான் மதிப்பீடு செய்யப்படும் என்றும் உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் மற்றும் கழிவுகள் புனகா-காசா நெடுஞ்சாலையின் ஜோம்லிங்தாங் பகுதியை மூடியுள்ளன.

பூடான் ஏரி - சித்திரிப்புப்படம்

பூடான் ஏரி – சித்திரிப்புப்படம்

உருகும் பனிப்பாறைகளின் அடியில் உள்ள பள்ளத்தாக்குகளில் சேகரிக்கப்படும் பெருமளவிலான நீர், திடீரெனப் பெருகி வெளியேறுவதே ‘பனிப்பாறை ஏரி உடைந்த வெள்ளப்பெருக்கு’ (Glacial Lake Outburst Flood – GLOF) எனப்படுகிறது.

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் பனிப்பாறைகள் வேகமாக உருகி இத்தகைய ஏரிகள் உருவாகின்றன. இந்த ஏரிகளைத் தாங்கி நிற்கும் இயற்கை அணைகள் (மண் மற்றும் பனிச்சுவர்கள்) உடையும்போது மிக மோசமான வெள்ளம் ஏற்படுகிறது.

கடுமையான மழைப்பொழிவு, நிலச்சரிவு, பனிச்சரிவு, நிலநடுக்கம் அல்லது பனிப்பாறைகள் அதிவேகமாக உருகுவது போன்ற காரணங்களால் இத்தகைய ஏரிகள் உடைந்து பேராபத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடதக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *