‘நான் 3 கோடி ரூபாய் கமிஷன் வாங்கினேனா?’- அமைச்சர் கீர்த்தனா விளக்கம் | minsiter keerthana explain on corruption allegation

Spread the love

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அமைச்சர் கீர்த்தனா

அமைச்சர் கீர்த்தனா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நான் லஞ்சம் கேட்கவும் இல்லை, வாங்கவும் இல்லை. ஆதாரமின்றி மீண்டும் மீண்டும் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் உண்மைகளாகக் காட்ட முடியாது. நான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. எந்தவிதமான நிதி முறைகேடு செயலிலும் ஈடுபடவில்லை. நான் பதவியேற்ற நாள் முதல் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, சந்தேகிக்கப்பட்டு வருகிறேன்.

பொது வாழ்வில் உன்னிப்பான கண்காணிப்பு இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஊழல் குற்றச்சாட்டு என்பது ஒரு சாதாரண விமர்சனம் அல்ல. அது எனது நேர்மையையும், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. சமீபத்திய வாரங்களில், எனக்கு ரூ.4 கோடி மதிப்பிலான வீடு இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் ரூ.10 கோடி மதிப்பிலான வீடு என்று கூறி வருகின்றனர். தனது திருப்பதி பயணத்தின்போது அணிந்திருந்த ஒரு பேஷன் நெக்லஸ், தங்க நாணயச் சங்கிலியாக சித்தரிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *