Gold: ரூ.97,720-க்கு சறுக்கிய தங்கம் விலை; 2027-ம் ஆண்டு விலை என்னவாகும்? – நிபுணர் விளக்கம்

Spread the love

தங்கம் விலை நல்ல இறக்கத்தைக் கண்டு வருகிறது.

இன்று சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம் விலை ரூ.2,040 குறைந்து ரூ.97,720-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.185-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை ஒரு லட்சத்திற்குக் கீழ் குறைந்து வருவதே மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

ஜெயந்திலால் சலானி
ஜெயந்திலால் சலானி

சரிவிற்கு என்ன காரணம்?

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம், தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

அதே பேட்டர்னில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறையும் போது, தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது.

பணவீக்க அச்சத்தால் உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் வங்கி முதலீட்டை நோக்கி நகர்கின்றனர். இதனால், தங்கம் விலை குறைகிறது.

தங்கம் விலை குறைந்து வருவது குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி விளக்குகிறார்…

“மத்திய வங்கி கொள்முதல், கையிருப்பு டைவர்ஸிஃபிக்கேஷன் ஆகியவற்றை வைத்து, பல உலகளாவிய வங்கிகள் தங்கம் தொடர்ந்து ஏற்றம் காணும் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன.

இருந்தாலும், சமீபத்திய புள்ளிவிவரங்களும் கவனத்திற்குரியவை…

> கோல்ட்மேன் சாக்ஸ் தனது 2027-ம் ஆண்டின் இறுதி இலக்கை $5,400-லிருந்து $4,650 ஆகத் திருத்தியுள்ளது — இது கிட்டத்தட்ட 14% குறைப்பாகும்.

தங்கம்
தங்கம்

> மார்கன் ஸ்டான்லியின் 2027-ம் ஆண்டின் இறுதி இலக்கு $5,250 ஆகும், இது முக்கிய நிறுவனங்களுக்குக் கூட வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருப்பதைக் காட்டுகிறது.

> உலகளாவிய மத்திய வங்கிகள் 2026-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 321 டன்கள் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளன. இது கடந்த ஆண்டை விட 42% அதிகமாகும்.

> ஆயினும், நவம்பர் 18 அன்று, உடனடித் தங்கம் ஒரு அவுன்ஸிற்கு சுமார் $3,796-ஐத் தொட்டது. இது அதன் ஜனவரி மாத உச்சமான $5,595-ஐ விட கிட்டத்தட்ட 32% குறைவாகும்.

வலுவான மத்திய வங்கி கொள்முதல் மட்டுமே தொடர்ந்து உயரும் விலைகளுக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

வட்டி விகிதங்கள், அமெரிக்க டாலர், முதலீட்டுப் பாய்ச்சல்கள் மற்றும் உண்மையான நுகர்வு ஆகியவையும் தங்கம் விலை நகர்வுக்கு முக்கிய காரணங்கள்.

நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை ஏற்றம் காணும் என்கிற கண்ணோட்டத்தை நான் மதிக்கிறேன்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *