நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி… கொண்டாடுவது எப்படி? – ஒரு வழிகாட்டல்!

Spread the love

துளசி விசேஷம் ஏன் தெரியுமா?

இலைகளில் துளசிதளம் விசேஷமானது. பிருந்தை என்கிற பக்தையின் பக்திக்கு ஆட்பட்ட கண்ணன் என்றும் அவளை விட்டுப் பிரியாதிருக்கும்படி அனுக்ரகித்தார். பிருந்தாவனம் கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான இடம் அல்லவா?!

எங்கெல்லாம் கிருஷ்ண நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் துளசி செழித்து வளரும்.‌ இது கிருஷ்ணரிடம் துளசி கேட்டு வாங்கிய வரம். அதேபோல் எங்கெல்லாம் துளசி போற்றப்படுகிறதோ அங்கெல்லாம் கிருஷ்ணர் நீங்காது உறைந்து அருளுகிறார். இது கிருஷ்ணர் தாமே துளசிக்கு அளித்த வரம்.

விதவிதமான பட்சணங்கள் ஏன்?

நிவேதனங்களில் முறுக்கு, சீடை போன்ற பட்சணங்கள், அப்பம், அவல், தயிர், பால், வெண்ணெய், போன்றவை சிறப்பானவை. கனிகளில் வாழை மற்றும் நாவற்கனி விசேஷம். கூடுதலாக சம்பிரதாயமாக தேங்காய், வெற்றிலை சேர்த்துக்கொள்ளுதல் வழக்கம்.

ஒருமுறை கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தன் விரலால் குடைபோல் தூக்கி  கோகுலவாசிகளைக் காப்பாற்றினார் அல்லவா?  இந்நிகழ்வு முடிந்தவுடன் பலமிழந்து களைத்துப் போயிருந்த கண்ணனுக்கு விதவிதமான பட்சணங்களைத் தயார் செய்து கோகுலவாசிகள் அளித்தனராம். அதனைப் போற்றுகிற வகையில்தான் ஜன்மாஷ்டமி அன்று அதிகமான பட்சணங்களைச் செய்கிறோம்.‌

கோகுலத்தில் இருந்த ஏழை மூதாட்டி விற்றுக் கொண்டிருந்த நாவல் பழங்களை வாங்குவதற்காக கைநிறைய தானியங்களை எடுத்துக் கொண்டோடினார் கிருஷ்ணர்.‌ ஆனால் அவர் குழந்தை அல்லவா? தானியங்கள் சிந்தி விட்டதால் ஓரிரு மணிகளே விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. ஆயினும் அப்பெண்மணி அவற்றைப் பெற்றுக்கொண்டு நாவற்கனிகளை அளித்தாள். வீடு திரும்பிய மூதாட்டியின் கூடையில் தானியங்களுக்கு பதிலாக பொன்னும் மணியும் மின்னிக்கொண்டிருந்தன.

ஏழை மூதாட்டிக்கு அருளிய கிருஷ்ணருக்கு அன்று முதல் நாவற்கனி விருப்பமான நிவேதனம் ஆயிற்று.

அவல் முக்கியம் ஏன்?

குசேலரின் பரிபூரண அன்பிற்கு அடையாளமாக அவரால் அளிக்கப்பட்ட எளிமையான அவல் பிரசாதத்தினை ஏற்றார் கிருஷ்ணர். அதனடிப்படையில் ஜன்மாஷ்டமி நிவேதனங்களில் அவல் பண்டத்தினை இடம்பெறச் செய்வது முக்கியமான‌ சம்பிரதாயமாக இருக்கிறது.

பால் பொருட்கள் ஏன்?

இன்றைய தினம் கிருஷ்ணருக்கு உகந்த பால் பொருட்களை நிவேதிப்பதால் ஆயிரம் பசுக்களை கோதானம் செய்வதற்கு நிகரான புண்ணியம் கிடைத்திடும்.‌ நிவேதன பிரசாதமான வெண்ணையை உட்கொள்ளும் பெண்களுக்குக்  குழந்தைப் பாக்கியம் கிடைத்திடும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.‌

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *