‘நிறைய நூலகங்கள் கட்டியது நாங்கதான் என பெருமைப்படுகின்ற திமுக நிறைய ஊழல்கள்.!’- அமைச்சர் ராஜ்மோகன்| rajmohan slams dmk for periyar library corruption issue

Spread the love

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

பெரியார் அறிவுலகம்

பெரியார் அறிவுலகம்

அதாவது பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் பெயரில் 1,800 நூல்கள் உள்ளதாகவும், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கும் தான் அகல்விளக்கு பதிப்பகத்தைக் கேள்விப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், மற்ற பதிப்பகங்களில் 300 பக்க நூலின் விலை ரூ.350 இருக்கும்போது அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூலின் விலை ரூ.1,445 ஆக இருக்கிறது.

நூல்களில் இடம்பெற்றுள்ள பன்னாட்டுத் தர புத்தக அடையாள எண்கள் (ISBN) போலியானவை என்றும், போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *