நீட் மறுதேர்வு இன்று: 22 லட்சம் மாணவர்களுக்கு தர்மேந்திர பிரதான் வாழ்த்து|22 Lakh Students Face NEET Retest After Paper Leak Row

Spread the love

கடந்த மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.

ஆனால், டெலிகிராமில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால், மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) நீட் மறுதேர்வு நடத்தப்படுகிறது.

3 மணிநேரம் 15 நிமிடங்கள் நடக்கும் இந்தத் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.15 வரை நடக்க இருக்கிறது.

தரவுகளின் படி, இன்று 22 லட்சம் மாணவர்கள் நீட் மறுதேர்வு கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான்

இந்தத் தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இன்று நீட்-யுஜி மறுதேர்வு நடைபெறவிருக்கிறது. தேசிய தேர்வு முகமை (NTA), அனைத்து மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், இந்தியக் கல்வித் துறை மற்றும் குறிப்பாக இந்தியாவின் மாணவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதவுள்ளனர். எந்தவொரு பயமும் கவலையும் இன்றி தைரியமாகத் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *