நீட் மறுதேர்வு… மத்திய அரசை அட்டாக் செய்த அண்ணாமலை..! – Kumudam

Spread the love

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் (NEET-UG) தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த முடிவு செய்தது.

அதன்படி, நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எந்தவித முறைகேடுகளும் இன்றி நடத்த மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பல்வேறு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மறுதேர்வுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் நிபுணர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மதிப்பீட்டு பணியாளர்கள் இணைய வசதி இல்லாத பாதுகாப்பான இடங்களில் னிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு மையங்களுக்கு அனுப்பும் வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் நோக்கில் இந்திய விமானப்படையின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நீட் மறுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளாட் பாஜகவின் முன்னாள் நிர்வாகி அண்ணாமலை.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்வறைக்குள் நுழைவதற்கு முன் அதிகரிக்கப்பட்ட சோதனைகள், நீண்ட நேர உடல் பரிசோதனை, தேர்வு நேரத்தை அதிகரிப்பது ஆகியவை ஏற்கெனவே மாணவர்களிடம் பெருகிவரும் தேர்வு குறித்த மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

நீட் மறுதேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள், சிக்கலைத் தீர்க்காமல் மாறாக புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது என்பது எனது கவலையாகும்என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசு வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், பல மாதங்களாகத் தேர்வுக்காக கடுமையாகத் தயாராகி வந்த மாணவர்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் மனஅழுத்தத்தை கவனிக்கத் தவறிவிட்டதாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *