மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.
அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண், “ கடந்த 2023 ஆம் ஆண்டு மதுரை காளவாசல் பகுதியில் லிங்கதுரை என்பவரது நிறுவனமான P.M.டவர்ஸ் என்ற தங்குவிடுதி ஒன்றில் அலுவலக வரவேற்பாளராக பணியில் சேர்ந்தேன். தாய், தந்தை இல்லாத நிலையில் என்னுடைய உறவினர்களின் வீட்டில் தங்கி தான் வேலைக்கு சென்றுவந்தேன்.
நிறுவனத்தின் ஓனரான லிங்கதுரை (45) என்னை அடிக்கடி திருமணம் செய்து கொள்கிறேன் என கூறுவார். நான் அவரை ‘அப்படி சொல்லாதீர்கள்’ என கண்டித்து வந்தேன். கடந்த 2024 ஆம் ஆண்டு கலெக்சன் பணத்தை எடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வருமாறு லிங்கதுரை கூறினார். `நான் வீட்டிற்கு வர மாட்டேன்” என்றபோதும், `நான் வீட்டில் குடும்பத்தோடு தான் இருக்கிறேன் தையரியமாக வரலாம்’ என சொன்னார்.
இதனை நம்பி அவருடைய வீட்டிற்கு சென்றேன். அவருடைய வீட்டில் லிங்கதுரையும், அவருடைய உறவினரான சூரஜ் ஆகிய இருவரும் கொடுத்த தண்ணீரை குடித்ததும், நான் மயக்கமடைந்துவிட்டேன். அந்த சமயத்தில் என்னை நிர்வாணப் புகைப்படம் எடுத்ததோடு, பாலியல் துன்புறுத்தலும் செய்தனர்.
மறுநாள் காலையில் என்னை அலுவலகத்திற்கு வரவழைத்து லிங்கத்துரையின் செல்போனில் அவர் எடுத்த ஆபாச புகைப்படம் எடுத்து வைத்துள்ளதை காட்டி, சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்தார். அடிக்கடி ஆபாசமாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதோடு அடியாட்களை வைத்து என்னை மிரட்டினார்.
`என்னை விட்டு விடுங்கள்’ என்று கேட்டதற்கு, , ‘நான் எனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என லிங்கதுரை கூறினார்.
பின்னர் திடீரென்று ஒருநாள் அவர் என்னிடம் “பெங்களூருவில் ஐ போன் ஷோரும் புதியதாக திறக்கவுள்ளதாகவும், நான் சொல்லும் நபர்களிடமும், எனது நண்பர்களிடமும் நீ உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.