மருத்துவப் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றிருந்தது. ஆனால், வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
இதன் மறுதேர்வு வருகிற ஜூன் 21-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இச்சூழலில், இந்தத் தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தேசியத் தேர்வு முகமை பரிந்துரைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்துள்ளது.

கட்டுப்பாடு வரும் ஜூன் 22, 2026-டன் முடிவுக்கு வரும் என்று தேசியத் தேர்வு முகமை கூறியுள்ளது.
மேலும், ஜூன் 30 வரை ‘மெசேஜ் எடிட்டிங்’ வசதி மட்டுமே முடக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் புதிய செய்திகளை அனுப்புவதிலோ அல்லது பெறுவதிலோ எந்தப் பாதிப்பும் இருக்காது.
தேர்வு தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களுக்கும் என்.டி.ஏ-வின் இணையதளத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், ஏதேனும் மோசடி கும்பல் அணுகினால் உடனடியாகச் சைபர் கிரைம் துறையிடம் புகாரளிக்க வேண்டும் எனவும் தேசியத் தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.