“நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்” – வாஞ்சிநாதன்| “The Chief Justices of the Supreme Court should conduct an inquiry into Justice G.R. Swaminathan” – Vanchinathan

Spread the love

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், சுமதி ஆகியோர் அமர்வில் உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மதியம் சுமார் 1:15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். 1:30 மணியளவில் உணவு இடைவேளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மாவட்ட ஆட்சியரை தனிப்பட்ட முறையில் அவரின் சேம்பருக்கு அழைத்துப் பேசியிருக்கிறார். இது தொடர்பான விவகாரம் அரசியல் வட்டத்திலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் விவாதமாகியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

அப்போது, “நேற்று நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தபோது, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. பிற்பகல் 1.30 மணிக்கு உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துவிட்டுச் சென்றார். அதன் பிறகு 4 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை, மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அதில், விசாரணைக்குப் பிறகு நீதிபதி தன்னைச் சேம்பருக்கு அழைத்து, உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *