நீதியின் குரல்! – குறுங்கதை

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

“நீ அடித்தாயா?”

“ஆம் அடித்தேன்”

“எதற்காக அடித்தாய்?”

“குடிக்கிறாள் அடித்தேன்!”

“குடிப்பதால் அடிப்பதா? அதற்கு உனக்கு உரிமை இருக்கிறதா?”

“ஐயா, நான் கடுமையாக வேலை செய்கிறேன்; அதற்காக குடிக்கிறேன்.”

“வேலை செய்வதற்கு ஒரு சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறாய். எல்லாம் எனக்கு தெரியும்…. தினந்தோறும் அவள் சித்திரவதை படுவதை என்னிடம் பலமுறை சொல்லி அழுது இருக்கிறாள்.

உனக்கு தெரிய வாய்ப்பில்லை தான்! காரணம் உனக்கு குடிப்பது தான் ஒரே வேலை; ஆனால் உன்னுடைய மனைவி தினம் 7, 8 வீடுகளில் பாத்திரம், பண்டங்கள் சுத்தம் செய்து குடும்ப வருமானத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறாள்.

உன் மனைவி எங்கள் வீட்டில் வேலை செய்வது கூட உனக்கு தெரியாது. அவள் வருமானத்தில் தான் உங்கள் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் படித்துக் கொண்டிருப்பதும் எனக்கு தெரியும்.

அப்படி உழைத்து கொட்டுவதை நீ வேடிக்கை பார்த்துக்கொண்டு, அதற்கு ஒரு சித்தாந்தத்தை தேடி, அவள் குடிப்பதை நீ கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய்?

நீ கேள்வி கேட்க வேண்டும் என்று தான் அவள் குடிப்பது போல் நான்நடிக்க சொன்னேன்!? உனக்கு உண்மையிலேயே “ரோஷம்” இருக்கிறது; அது நல்லது தான்! நான் பாராட்டுகிறேன்!

உனக்காக தினமும் சாப்பிடுவதற்கு ஆட்டுக்கால் சூப், மீன் வறுவல், மட்டன் பிரியாணியும் செய்து கொண்டிருக்கும் அவளை கொஞ்சமாவது நினைத்துப் பார். அவள் குடும்பத்திற்காக பாடு படுகிறாள்.”

ஒவ்வொரு வீட்டில் உள்ள குடும்ப பெண்களுடைய உழைப்பை மதிப்பிட்டு அவர்களுக்கு என்று ஒரு ஊதியத்தை கணவரிடம் இருந்து தனியாக பெற்று அதன்மூலம் அரசு உருவாக்கி உள்ள “பெண்கள் சிறப்பு சேமிப்பு கணக்கில்” மாதாமாதம் வைப்பு வைக்க வேண்டும் என்றும்; அதைப் பெற மனைவிமார்களுக்கு மட்டும் உரிமை இருக்கிறது என்கிற அரசு அறிக்கையை காட்டி இவ்வாறாக தன் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி……

இப்படி “பாசாங்கு” செய்வதற்கே உன்னுடைய “மானம்” போய்விட்டதாக சொல்கிறாய் நீ; தினமும் குடித்துவிட்டு மானங்கெட்ட தனமான நடந்து கொண்டிருப்பதை உன்னால் எப்படி ஜீரணிக்க முடிகிறது.

நீதிபதி குடிக்கும் மகனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும்; அந்தத் தொகையை அவன் மனைவி பெயரில் அரசு வழிகாட்டல் படி நெறிப்படுத்த பட்ட வங்கி கணக்கில் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்படி கட்டாத பட்சத்தில் ஆறு மாதம் என்பது ஒரு வருடமாக அவனுடைய தண்டனை அதிகப்படுத்தப்படும்.

இந்த ஆறு மாதங்களில் அவனுடைய மனைவிக்கு சிறையிலேயே தங்கி பணியாற்ற வேலையும் கொடுக்கப்படுகிறது.

குடிமகனின் மனைவி நீதிபதியை பார்த்து கும்பிட்டு வணங்கினாள்.

குடி மகனோ! இனி குடிக்க மாட்டேன்! இது சத்திய மடி தங்கம்! என்று கெஞ்சினான்!.

எது எப்படியோ, அவர்களுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைய நீதிபதி ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் என்பது எல்லா பத்திரிக்கைகளிலும் இன்று வந்த செய்தியாக இருக்கிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *