நீல நிறத்தில் மாறும் உடல்.. உயிர் பிழைக்க போராடும் சிறுவன்! காப்பாற்ற உங்களால்தான் முடியும்! | Help 15-Year-Old Rithish Breathe Again: Urgent Heart Surgery Needed

Spread the love

Tamilnadu

oi-Halley Karthik

தர்மபுரி: ரித்தீஷ் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்துள்ள ஒரு மாணவன். எதிர்காலத்தில் உயிரியல் மற்றும் கணிதம் பயின்று ஒரு சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவர். ஆனால், பிறந்தது முதல் அவர் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் இப்போது உயிருக்கு போராடி வருகிறார். அவரை காப்பாற்ற உதவுங்கள்.

ரித்தீஷ், ‘Fallot’ எனும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ரித்தீஷுக்கு ஒரு வயது இருக்கும் போதே Tetralogy of Fallot என்ற தீவிரமான இதயப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

tamil nadu medical health

இது பிறவியிலேயே இதயத்தில் ஏற்படும் நான்கு விதமான குறைபாடுகளின் தொகுப்பாகும். இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும், உடல் நீல நிறமாக மாறும் (Cyanosis) மற்றும் அதீத சோர்வு ஏற்படும்.

இந்த பிரச்சனைக்காக 2018-ல் இவருக்கு BT shunt என்ற தற்காலிக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது உயிர் பிழைக்க உதவியதே தவிர, நிரந்தர தீர்வாக அமையவில்லை.

தர்மபுரியில் நடந்த மருத்துவ முகாமில் MIOT மருத்துவமனை மருத்துவர்கள் ரித்தீஷை பரிசோதித்தனர். தற்போது அவருக்கு உடனடியாக கீழ்க்கண்ட அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

tamil nadu medical health

Intracardiac repair with RV-PA conduit (இதயத்தின் உள்ளே இருக்கும் குறைபாடுகளைச் சரிசெய்து, ரத்த ஓட்டத்தை சீராக்க புதிய குழாய் பொருத்துதல் மற்றும் பழைய தற்காலிக ஷன்ட்டை நீக்குதல்) அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் இதற்கு ₹4,50,000 தேவைப்படுகிறது.

ரித்தீஷின் தந்தை ஒரு தினக்கூலித் தொழிலாளி. அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது அந்தக் குடும்பத்திற்கு இயலாத காரியம். ரித்தீஷின் கனவுகளும் உயிரும் இப்போது மக்களின் உதவியை நம்பி மட்டுமே உள்ளன.

ரித்தீஷ் மீண்டும் பள்ளிக்குச் சென்று தனது கனவுகளைத் தொடர, உங்களால் இயன்ற சிறு தொகையை வழங்கலாம். ஒரு மாணவனின் கல்வி மற்றும் உயிரைக் காக்க நாம் அனைவரும் இணைந்து கரம் கொடுப்போம். உங்களால் நிதி உதவி செய்ய முடியாவிட்டாலும், இந்தத் தகவலை மற்றவர்களுக்குப் பகிர்வதன் மூலம் (Share) கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *