தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் “ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025′ விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘டிராகன்’, ‘டியூட்’ படங்களுக்காகப் பிரதீப் ரங்கநாதன் வென்றார்.
விருது பெற்ற பிறகு பேசிய பிரதீப் ரங்கநாதன், “நான் நடிக்க வரும்போதே நமக்கு அவார்ட்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்’னு நினைச்சுக்கிட்டேன்.

ஏன்னா நான் நடிக்கிறது மாஸ் கமர்ஷியல் படங்கள். இதுதான் நான் நடிக்கணும்’னு ஆசையும் படுறேன். அதைத் தாண்டி இங்கு இருக்கக்கூடிய டேலன்ட்ஸ்க்கு நடுவுல எனக்கு எப்படி அவார்டு வரும்’னு எனக்கே தெரியும்.
அதனால எனக்கு அவார்டுலாம் வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் ‘லவ் டுடே’ படத்தில நடிக்கும்போது மட்டும் சிறந்த அறிமுக நடிகருக்கான அவார்டு கிடைக்கும்’னு நினைச்சேன்.