International
oi-Halley Karthik
தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும்-ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது. எனவே ஈரான் உடன் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்ல.. பதிலுக்கு ஈரான், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. காரணம் எல்லாம் பெருசா ஒன்னும் இல்லை. இதற்கு முன்னர் ஈராக் மீதும் மற்ற வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தும் போது சொன்ன அதே காரணம்தான். அதாவது ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று டிரம்ப் கதறினார்.

இப்படியாக தாக்குதல் நடத்த.. பதிலுக்கு சும்மா இல்லாத ஈரான், அமெரிக்காவுக்கு உதவும் மொத்த வளைகுடா நாடுகள் மீதும் சுற்றி, சுற்றி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் கடல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. அப்புறம் என்ன? அரபு நாடுகளிலிருந்து நமக்கு வர வேண்டிய பெட்ரோல், டீசல் வரவில்லை. உலகின் பல்வேறு நாடுகளும் இந்த பிரச்சனை எதிர்கொள்ள தொடங்கின. எனவே அமெரிக்காவிடம் போய்.. போரை கைவிட வலியுறுத்தின.
இதுதான் சான்ஸ் என்று நினைத்த அமெரிக்கா.. ஈரான் மீது எக்கச்சக்கமாக கட்டுப்பாடுகளை போட்டு, தன் இஷ்டத்திற்கு அதை வளைக்க முயன்றது. ஈரான் ஒன்னும் லேசில் விடும் ஆள் கிடையாது. எனவே அது சண்டை செய்தது. இருந்தாலும் எவ்வளவுதான் சண்டை செய்ய முடியும்? எனவே அமைதி ஒபந்தத்திற்கு முன் வந்தது.
இப்படியாக.. இரு கரங்களை கூப்பி.. சுபம் என்று சொல்லி போருக்கு எண்ட் கார்டு போடும் நேரத்தில், மீண்டும் தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. இந்த தாக்குதல் காரணமாக ஈரான் டென்ஷனாகியிருக்கிறது. அமெரிக்காவுடன் போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்படுவதாக ஈரான் தெளிவாக சொல்லிவிட்டது. குறிப்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக கூறியிருக்கிறது.
எப்படியாவது இந்த சண்டை முடிந்து அமைதி திரும்பி விடாதா? என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஈரானின் அறிவிப்பு ஷாக் கொடுத்திருக்கிறது.

