இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரம் அடைந்த இசக்கியப்பன், அங்கு வீடு கட்டுமான பணிக்காக வைத்திருந்த செங்கலை எடுத்து மகாராஜன் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்குப் போராடினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமபைல்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீஸார், உயிரிழந்த மகாராஜன் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மரித்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிநீர்ப் பிரச்னைக்காக பஞ்சாயத்து தலைவரைக் கொலை செய்த இசக்கியப்பன் தலைமறைவானார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளி இசக்கியப்பனைக் கைது செய்தனர்.
“கடந்த சில தினங்களாக தனது வீட்டுக்கு மட்டும் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்து, பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அங்கு கிடந்த செங்கலை எடுத்து பஞ்சாயத்து தலைவரின் தலையில் தாக்கியிருக்கிறார்” என்கிறார்கள் போலீஸார்.