இதுகுறித்து களக்காடு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், “திருமணத்தின்போது 70 சவரன் தங்கநகை, சீர்வரிச்சைப் பொருள்கள், 5 லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தும், மேலும் பணம் கேட்டு வழக்கறிஞர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. கணவன் – மனைவி இடையே நடந்து வந்த குடும்பத் தகராறு குறித்து ராஜலெட்சுமி, தன் சகோதரர் அருணாச்சலராஜாவிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான், ராஜலெட்சுமி தற்கொலை செய்து கொண்டார். தனது அக்காளின் இறப்பிற்கு அவர் கணவர்தான் காரணம் என நினைத்த அருணாச்சலராஜா, தனது நண்பர் ராம் உள்ளிட்ட சிலருடன் கடம்போடுவாழ்விலுள்ள வீட்டிற்குச் சென்று அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்” எனத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சலராஜா மற்றும் ராம் ஆகிய இருவரைக் கைதுசெய்த போலீஸார் மற்றவர்களை தேடி வருகிறார்கள்.