“ராகுலை விமர்சித்தால் சும்மா இருக்க மாட்டோம்” – ஜோதிமணி | “If you criticize Rahul, we won’t stay silent” — Jothimani

Spread the love

தமிழ்நாட்டில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியிருக்கிறது. இன்னொருபக்கம் தமிழ்நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. தேர்தல் கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தையின்போதே, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் போன்றவர்கள் தவெக கூட்டணிக்கான முன்னெடுப்புகளை செயல்படுத்தினர். செல்வப்பெருந்தகையின் முட்டுக்கட்டையே தவெக பக்கம் காங்கிரஸ் திரும்பாமல் இருந்ததற்கு காரணம் எனக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, திமுக-வுடன் கூட்டணியில் இணைந்து 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 5 இடங்களில் வென்றது. திமுக ஆட்சியிலிருந்து எதிர்க்கட்சி இருக்கைக்கு நகர்த்தப்பட்டது.

தவெக - காங்கிரஸ்

தவெக – காங்கிரஸ்

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் – தவெக இணைவு சாத்தியமாகலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, காங்கிரஸ் மனப்பூர்வமான ஆதரவை சில நிபந்தனைகளுடன் தவெக-வுக்கு வழங்கியிருக்கிறது. அதேநேரம், சமூக ஊடகங்களில் காங்கிரஸ் Vs திமுக என விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தன் எக்ஸ் பக்கத்தில், “நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *