திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் விஜய் படத்தை வைப்பது தொடர்பாக இப்போதுவரை பிரச்சனை நீடித்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க-வினர் தெரிவிக்கின்றனர்.
அரசியலமைப்புச் சட்டத்தையும் பதவியேற்றபோது விருப்பு வெறுப்பற்று செயல்படுவதாகக் கூறிய உறுதிமொழியையும் மீறும் மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் த.வெ.க-வினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த் விவகாரம் குதித்து நெல்லை மேயர் ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ” அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் இது போன்ற பிரச்சனைகளை கிளப்பி வருகிறார்கள். முதலமைச்சரின் படத்தை வைக்க வேண்டும் என்று த.வெ.க-வினர் கோரிக்கை வைத்ததும் மாநகராட்சியில் அவரது படத்தை வைத்து விட்டோம்.
இப்போது அதை எனது அறையில் மையப்பகுதியில் வைத்திருக்கிறார்கள் அங்கு அமர பிடிக்காமல் சற்று தள்ளி அமர்ந்திருக்கிறேன், அவ்வளவுதான்” என்று முடித்துக் கொண்டார்.
“பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், இருக்கை விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது” என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.