மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை, வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சேமிப்பு, பராமரிப்பு, கையாளுதல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும், இது போன்ற சேதங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் இடம் மட்டுமல்ல, பல மாவட்டங்களில் இந்த பிரச்னை உள்ளது. ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது. பெரும் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.