நேபாளம்: “தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்” – சொற்பொழிவாளர் மங்கையற்கரசி உருக்கம் | Nepal: “We live in the hope of returning to our homeland” – Speaker Mangaiyarkarasi speaks movingly.

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கடந்த 20-ம் தேதி நாங்கள் அனைவரும் Kerung Border வழியாக நேபாளத்திற்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கைலை யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டாம் நாள் பரிக்கிரமாவை நிறைவு செய்து திரும்பிய போதுதான், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலச்சரிவு மற்றும் பேரிடர் சம்பவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

சொற்பொழிவாளர் மங்கையற்கரசி

சொற்பொழிவாளர் மங்கையற்கரசி

அதைக் கேட்டதிலிருந்து மிகுந்த மனவேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். இந்தப் பேரிடரில் பல்லாயிரக்கணக்கான நேபாள மக்களும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மற்றும் தமிழக யாத்திரிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களோடு இந்த ஆன்மீகச் சுற்றுலாவில் 148 தமிழர்கள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 150 பேர் பயணம் மேற்கொண்டுள்ளோம். சிவபெருமானின் அருளால் நாங்கள் அனைவரும் தற்போது “சாகா’ (Saga) என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *