நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி பெட்டகம்.. கட்டுக்கட்டாக பணத்தை அள்ளிச்சென்ற மக்கள் | Bank vault swept away in Nepal floods; people made off with bundles of cash

Spread the love

International

oi-Mani Singh S

காத்மண்ட்: நேபாளம் பெருவெள்ளம் உலகையே உலுக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் உயிரை பணைய வைத்து மீட்பு பணிகளுக்கு உதவும் நிலையில், இரக்கமின்றி சில கொடூர செயல்களும் வெள்ள சம்பவத்தின் போது நடைபெற்றுள்ளது. வெள்ளத்தில் வங்கி ஒன்றின் காப்பக பெட்டி அடித்து வரப்பட்ட நிலையில், அதனை தூக்கி சென்ற சிலர், உள்ளே கட்டுக்கட்டாக இருந்த பணத்தை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் 26 ஆம் தேதி மதியம் யாருமே நினைத்து பார்த்திராத துயர சம்பவம் நடைபெற்றது. அந்த நாட்டின் முக்கிய போடோ கோஷி நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுனாமி போல அசுர வேகத்தில் தண்ணீர் கரையோரங்களில் இருந்த கட்டிடங்கள், பாலங்களை அடித்து சென்றது.

Bank vault swept away in Nepal floods people made off with bundles of cash

வங்கி காப்பக பெட்டி

இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் உயிரை பணைய வைத்து மீட்பு பணிகளுக்கு உதவும் நிலையில், இரக்கமின்றி சில கொடூர செயல்களும் வெள்ள சம்பவத்தின் போது நடைபெற்று வரும் அவலமும் அங்கு அரங்கேறியுள்ளது. அதாவது வெள்ளத்தில் வங்கி ஒன்றின் காப்பக பெட்டி அடித்து வரப்பட்ட நிலையில், அதனை தூக்கி சென்ற சிலர், உள்ளே கட்டுக்கட்டாக இருந்த பணத்தை திருடியுள்ளனர்.

கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி சென்றனர்

92,68,505 நேபாளம் பணம் இருந்த நிலையில், அதனை திருடிச் சென்றவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அள்ளியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், விரைந்து சென்ற போலீசார் வங்கி பணத்தை போலீசாரிடம் ஒப்படைக்காமல் சட்ட விரோதமாக திருடிய 29 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். துயர காலத்திலும் மனசாட்சியின்றி மக்கள் இப்படி நடந்து கொள்ளும் நிகழ்வுகள் பெரும் வேதனையை எற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவிட்டு இருந்தனர். அண்மையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை முடியை பிடித்து சென்ற இருவர், பெண்ணின் சடலத்தில் இருந்து காதணிகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

கைது செய்த போலீசார்

நாராயணி ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்த வீடியோ வெளியான நிலையில், கொடூர மனம் படைத்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். நேபாளத்தில் வெள்ள பாதிப்புக்கு நடுவிலும் இத்தகைய கொடூர செயல்கள் நடைபெறுவது மனித சமூகம் எதை நோக்கி செல்கிறது என்ற ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக இருப்பதாக சமூக ஆர்வலர்களும் பதிவிட்டு வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *