“உங்களுடைய அக்கறைக்கும், தாராளமான உதவிக்கும் நன்றி”- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாளம் அதிபர் | Nepal President thanks India for ‘generous support and solidarity

Spread the love

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பேரிடரில் இந்தியர்களும் சிக்கி இருக்கின்றனர். இந்நிலையில் கடும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா அளித்த உதவிக்காக அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடெல் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து, நீங்கள் காட்டிய கனிவான அக்கறைக்கும், உங்கள் அரசு வழங்கிய தாராளமான உதவிக்கும், ஒற்றுமை உணர்வுக்கும், நேபாள அரசு மற்றும் மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பேரிடரில் இந்தியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்காக, இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *