பல நூறு பேரைக் கொன்ற நேபாள வெள்ளப் பேரிடரில் சின்ன ஆச்சர்யமும் நடந்துள்ளது.
கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் பனிப்பாறை சரிந்து நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளம் தொடங்கியதே நேபாளத்தில் உள்ள ரசுவா மாவட்டத்தில்தான்.
ரசுவா மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கே மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன… வருகின்றன.

ரசுவா மாவட்டத்தில் உள்ளது திமுரே கிராமம். வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 28) இந்தக் கிராமத்தில் வழக்கம்போல மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அப்போது சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மெல்லிய அழுக்குரல் கேட்டுள்ளது.
அந்த இடிபாடுகளை அப்புறப்படுத்தி பார்த்தப்போது, அங்கே 6 வயது சிறுமி இருந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட மூன்று நாள்கள் இடிபாடுகளுக்கு கீழே சிறுமி இருந்திருக்கிறார்.
சிறுமியை மீட்டு ஆரம்பத்தில் திமுரேயில் உள்ள ஏ.பி.எஃப் (APF) எல்லைப் பாதுகாப்பு முகாமில் அவருக்குச் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால், கூடுதல் மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.