கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அந்தப் போரை நிறுத்தினேன்… இந்தப் போரை நிறுத்தினேன்… எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்” என்று பலமுறை கூறிக்கொண்டிருந்தார்.
ஆனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு கிடைத்தது என்னவோ வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்குத்தான். இதில் ட்ரம்பிற்குக் கடும் அதிருப்தி.
இருந்தும் அமைதியை முன்னெடுக்கிறார் என்று மரியா ட்ரம்பிடமே அவருக்குக் கிடைத்த நோபல் பரிசைச் சமர்ப்பித்தார்.

நாளை (அக்டோபர் 9) 2026-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நேரத்தில் நேற்று (அக்டோபர் 7) ட்ரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம், “நோபல் பரிசு வரலாற்றிலேயே என்னை விட அதற்குத் தகுதியான நபர் வேறு யாருமே இருந்ததில்லை.