நோபல் நாயகி நர்கீஸ் முகமதி ஜாமீனில் விடுதலை: ஈரானிய சிறைக் கொடுமைகளின் பின்னணி! Nobel Laureate Narges Mohammadi Released on Bail: The Backdrop of Iranian Prison Atrocities!

Spread the love

ஈரானின் எவின் (Evin) சிறைச்சாலை உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்று. அந்த இருண்ட சுவர்களுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என்றால், அது நர்கீஸ் முகமதி என்ற மனித உரிமைப் போராளியின் குரல்தான்.

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர், ஈரானிய பெண்களின் உரிமைகளுக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.

நர்கீஸ் முகமதி | Narges Mohammadi

நர்கீஸ் முகமதி | Narges Mohammadi

வெள்ளைச் சித்திரவதை (White Torture)

உடல்ரீதியான அடிகளை விட மனரீதியான சித்திரவதை கொடூரமானது. இதைத்தான் நர்கீஸ் `வெள்ளைச் சித்திரவதை’ என்கிறார். ஒரு கைதியைப் பல மாதங்கள் எவ்வித தொடர்பும், வெளிச்சமும் இன்றி ஒரு சிறிய தனிமைச் சிறையில் அடைப்பது, அவர்களை மனதளவில் முடக்கும் ஒரு கொடூர உத்தி.

நர்கீஸ் இந்தத் தனிமைச் சிறையில் பல நாள்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதை எதிர்த்தது மட்டுமின்றி, தன்னுடன் சிறையில் இருந்த மற்ற பெண்களிடம் பேசி, அவர்கள் அனுபவித்த தனிமைச் சிறைக் கொடுமைகளை ஆவணப்படுத்தி `White Torture” என்ற பெயரில் ஒரு புத்தகமாகவே வெளியிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *