விசிக விருது வழங்கும் விழா சென்னையில் ஜூலை. 5 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், “திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலைமையே அறிவித்துவிட்டது.
இதுவரை நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமோ என்றும் அறிவிக்கவில்லை. ஒருவேளை தவெக தலைமையில் கூட்டணி உருவானால், அதில் இடம்பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்லை.
.jpeg?q=75&auto=format%2Ccompress)
திமுக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விசிகவிலிருந்து ஒருவரை அழைத்து கட்சியில் இணைத்தபோது, திமுக தலைமையே எங்களுடன் உறவு இல்லை எனச் சொல்லிவிட்டது. விசிகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது மு.க.ஸ்டாலின் தான்” என்று பேசியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை. 7) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “அமைச்சரவையில் சேர்ந்த உடனேயே நாங்கள் இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருளில்லை.