மாலை 7 மணிக்கு மேல் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, சூடான பால் குடிப்பது போன்றவற்றைச் செய்யலாம்.
மருத்துவரிடம் போக விருப்பமில்லை என்றால், ஒரு டைரி அல்லது ஜர்னலில் (Journal) தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் எழுதி வெளிப்படுத்தலாம்.
தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
மனஅழுத்தத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ள ஊக்கப்படுத்தலாம்.
யோகா, தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep breathing exercises), தியானம் அல்லது வாரத்திற்கு ஒருமுறை ஷாப்பிங், கோயிலுக்குச் செல்லுதல் போன்றவற்றைச் செய்யலாம்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தூக்கம் வரவில்லை என்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ‘மருத்துவரிடம் சென்றாலே தூக்க மாத்திரை கொடுத்து விடுவார்கள், அதற்கு அடிமையாகி விடுவோம்’ என்ற பயத்தினாலேயே பலர் வருவதில்லை. ஆனால், எடுத்தவுடனேயே யாரும் மாத்திரைகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள் என்பதை அவர்களுக்குப் புரியவைத்து, பயத்தைப் போக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் மன அழுத்தத்தைப் பகிர்ந்து கொண்டு, தேவையான உளவியல் ஆதரவு (Psychological support) கிடைத்தாலே மாத்திரைகள் இன்றி பிரச்னை சரியாகிவிடும். இந்த விழிப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் மருத்துவரைச் சந்திக்க முன்வருவார்கள்.
உளவியல் மருத்துவர் நித்யா:
சென்னை, அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிகிறார். உளவியல் மருத்துவத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.