மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; புனித நீர்தெளிப்பு, நீதிபதி அவமதிப்பு குறித்து விசாரணை தேவை?/Meenakshi Amman temple kumba festival

Spread the love

தேர்தலுக்கு முன்பாக தவெக அரசு, கோயில் வழிபாட்டில் பாகுபாடு இருக்காது என்று சொல்லிவிட்டு, இன்று அதற்கு நேர் எதிராக அமைச்சர்களும், அவர்களது உறவினர்களும் அதிகாரிகளும், குடமுழுக்கு நிகழ்வை ஆக்கிரமித்துக் கொண்டு, மக்களை அனுமதிக்காமல் அலைக்கழித்து, குடமுழுக்கு புனித கலச நீர், மக்கள் மீது செழிக்கப்படாமல் அவமரியாதை செய்திருப்பது, குடமுழுக்கு நோக்கத்தையே சீர்குலைத்து விட்டது. கோயில் நிர்வாகத்தின் நோக்கம் பக்தர்களின் நலனையும் கோயில் பாதுகாப்பையும், இறைவன் அருளைப் பெரும் நம்பிக்கையையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு

மீனாட்சி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு

ஆனால், குடமுழுக்கில் பயன்படுத்தப்பட்ட புனித நீர் என வெறும் தண்ணீரை வாளியில் ஊற்றி, காவல்துறையினர் பக்தர்கள் மீது தெளித்தது திட்டமிட்ட ஏமாற்றும் செயல் என மக்கள் நேரடியாக தெரிவித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அவை உண்மையா என்பதை அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.

புனித நீருக்கு பதிலாக, வேறு நீர் தெளிக்கப்பட்டது உண்மையானால் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ராஜினாமா செய்ய வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடனும், சட்ட விதிகளின்படியும், அறங்காவலர் குழுவின் உரிய ஆலோசனையுடனும் நடைபெற வேண்டும். அறங்காவலர் குழுவை புறக்கணித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் விசாரிக்கப்பட வேண்டும்.

கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு அரசியல் விளக்கங்களை விட ஆவணங்களுடன் கூடிய வெளிப்படையான பதில்களே தேவை. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷுக்கு எதிராக பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவார அமைப்புகள் வாயை திறக்காமல் உள்ளன.

தலைமை நீதிபதி தொடர்பாக வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்தும் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து புகார்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும், சட்டத்தின் ஆட்சியும், ஆலயங்களில் சமத்துவமும் நிலைநாட்டப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *