பக்ரீத்: “உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை” – நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜவாஹிருல்லா! | Jawahirullah has expressed his views regarding the verdict delivered by G.R. Swaminathan.

Spread the love

இந்திய மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் 1976-ஆம் ஆண்டு அரசாணைக்கு முழு சட்ட அங்கீகாரம் அளித்தார். இதன்மூலம், தமிழ்நாட்டில் பசு வதை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகை உட்பட எந்த நாளிலும் தமிழ்நாட்டில் எங்கும் பசுக்களோ, கன்றுகளோ வெட்டப்படக் கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் (DGP) உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் ஆடு, செம்மறியாடு உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தன் எக்ஸ் பக்கத்தில், “பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் வழிபாட்டில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வின் முறைகேடான தலையீடு வருத்தமளிக்கிறது.

தியாகத் திருதாள் (பக்ரீத்) பெருநாளை முன்னிட்டு மாடுகள் மற்றும் கன்றுகளை அறுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் விழுமியங்களுக்கு எதிராக அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கவும், பரப்புரை செய்யவும், பின்பற்றவும் உரிமை வழங்குகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *