காங்கிரஸ் நிர்வாகி மீது தாக்குதல்: "திமுகவின் ரவுடித்தனம் தோற்கடிக்கப்பட வேண்டும்"- மாணிக்கம் தாகூர்

Spread the love

தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜை நேற்று இரவு திமுக ஆதரவாளர்கள் கொடூரமாகத் தாக்கி இருக்கின்றனர். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது, அவரது ஆட்டோ ரிக்‌ஷா சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் குறித்து திமுக மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளைக் கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான அரசியல் பழிவாங்கலாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது, மக்கள் தேர்தலில் நிராகரித்த பிறகு பொறுமையை இழந்து வரும் ஒரு கட்சியின் அகந்தையையும் சகிப்புத்தன்மையின்மையையும் வெளிப்படுத்துகிறது.

அரசியல் ரீதியாகப் பதிலளிக்காமல், அமலாக்கத்துறை விசாரணைகளை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டவும் தாக்கவும் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்போது மிரட்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் தலைவர் சஹாயராஜ் உடனடியாக இந்த விவகாரத்தை நகர காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். காங்கிரஸ் நிர்வாகி காமராஜைக் கொலை செய்ய முயன்றவர்களுக்கு எதிராகக் கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். உதயநிதியின் தலைமையில், வன்முறையும் மிரட்டலும் திமுகவின் அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன.

காங்கிரஸ் அமைதியாக இருக்காது. இந்தக் கோழைத்தனமான அரசியலை எதிர்த்து ஒன்றுபட்டு போராடுவோம்; இந்த வன்முறை சக்திக்கு எதிராக உறுதியாக நிற்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *