பங்கு சந்தை உலகில் ‘உலக சாதனை’ படைத்துள்ள லலிதா ஜூவல்லரி!| Lalitha Jewellery sets a ‘world record’ in the stock market

Spread the love

லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிடெட்டின் ஆரம்ப பொது பங்கு வெளியீடு (IPO) ஆகஸ்டு 17 அன்று தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதில், நகை உலகில் இதுவரை வரலாறு காணா விதமாக 62.97 மடங்கு “அதிக முன்பதிவு’ நடந்துள்ளது. அதாவது ஒரு பங்குக்கு 62.97 பேர் விண்ணப்பித்துள்ளனர்!

இது ரூ.1700 கோடி IPO என்ற அளவை வைத்து பார்க்கும்போது, இந்த சந்தாதாரர் சேர்க்கை, நகை உலகில் லலிதா ஜுவல்லரி IPO-விற்கு முதலிடத்தை அளிக்கிறது.

தலா ₹5 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கான விலை வரம்பு ₹190 முதல் ₹201 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

லலிதா ஜூவல்லரி

லலிதா ஜூவல்லரி

குறைந்தபட்ச விண்ணப்ப அளவு (Bid Lot) 74 பங்குகள்; அதன்பிறகு 74 பங்குகளின் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த IPO-வில் ₹1200.00 கோடி வரையிலான புதிய பங்கு வெளியீடும், நிறுவனர் (Promoter) திரு. எம். கிரண் குமார் மூலம் ₹500.00 கோடி வரையிலான விற்பனைக்கான பங்கு வெளியீடும் (Offer-for-sale) அடங்கும்.

இந்தச் சலுகையானது புக்-பில்டிங் செயல்முறை மூலம் வழங்கப்பட்டது. இதில், நிகரச் சலுகையில் 50%-க்கு மிகாமல் தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கும், 15%-க்குக் குறையாமல் நிறுவனசாரா ஏலதாரர்களுக்கும் (Bidders), மற்றும் 35%-க்குக் குறையாமல் சில்லறைத் தனிநபர் ஏலதாரர்களுக்கும் (Bidders) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *