மற்றபடி பிறந்த குழந்தைகளுக்குச் சரியான அளவுள்ள, தரமான டயாப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயாப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவாக இருக்கின்றன. ஈரத்தினால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயாப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தைக்கு ஒருமுறை டயாப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று, நான்கு மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை. பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன.
தரமான, நல்ல மெட்டீரியலில் செய்யப்பட்ட டயாப்பர்களை குழந்தை தூங்கும்போதும், பயணத்தின் போதும், தவிர்க்க இயலாத நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறையும் டயாப்பரை மாற்ற வேண்டியது அவசியம். பல மணி நேரம் டயாப்பர் அணிவிப்பதால் குழந்தைக்கு புண் ஏற்படாமல், சருமம் பாதிக்கப்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.